தேவர் மகன் 2 கமல்ஹாசன் அறிவிப்பு

1992-ல் பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தேவர் மகன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன்,நாசர்,ரேவதி,கவுதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

தேசிய விருது பெற்ற இப்படம் இந்தி,கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.இதற்கிடையில் கமல் அரசியல் கட்சி துவங்கிய பின் அவர் நடித்து சமீபத்தில் வெளியான படம் `விஸ்வரூபம் 2′.தற்போது,கமல்ஹாசன் கைவசம் `இந்தியன் 2′ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய 2 படங்கள் உள்ளன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல் தேவர் மகன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அவர் அறிவித்த சில நிமிடங்களில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இச்செய்தி இடம்பெற்றது.ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்2 படத்திற்கு பின் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.