தொரட்டி – திரை விமர்சனம்

நடிப்பு – ஷமன் மித்ரு, சத்யகலா அழகு மற்றும் பலர்

தயாரிப்பு – ஷமன் பிக்சர்

இயக்கம் – மாரிமுத்து

இசை – வேத்சங்கர் சுகவனம், ஜித்தின் ரோஷன்

மக்கள் தொடர்பு – சி.என்.குமார்

வெளியான தேதி – 2 ஆகஸ்ட் 2019

ரேட்டிங் – 3/5

புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்திற்கு எதிராக எவ்வளவோ பேர் எவ்வளவோ பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். குடிப்பழக்கத்தால் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் எழை இளைஞன் ஒருவனும், அவனுடைய வாழ்க்கையும் எப்படி எல்லாம் சீரழிந்து போனது என்பதை இந்தப் படம் ஆழமாகவும், அழுத்தமாகவும் புரிய வைத்திருக்கிறார் நமது இயக்குனர். மாரிமுத்து

தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு பல படங்கள் வெளி வந்தாலும் நான்கைந்து படங்கள்தான் நாமும் தரமான படங்களைத் தந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமையை சற்றே தமிழ் சினிமாவை காப்பாற்றிக் கொண்டு வருகிறோம்.

இயக்குனர் மாரிமுத்து, இராமநாதபுரம் மாவட்டத்தின் வயல்வெளி வாழ்வியலை அவ்வளவு அற்புதமாகவும் யதார்த்தமாய் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் இயற்கைகள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்ச்சியாக படம் பிடித்து காண்பித்துள்ளார்.

கதாநாயகன் ( மாயன் ) ஷமன் மித்ரு மற்றும் கதாநாயகி ( செம்பொண்ணு )
சத்யகலா இரு குடும்பத்தினர்களும் செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஊர் ஊராக சென்று கிடை போட்டு பிழைப்பு நடத்தும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

அறுவடை முடிந்து அடுத்த உழவுக்குள்ளாக அந்த நிலங்களில் ஆடுகளை அடைத்து வைத்து அதன் ஆடுகளின் புழுக்கை அப்படியே இயற்கை உரமாக வயலுக்குப் பயன்படுத்தி நிலத்தை உழுவார்கள். அப்படி, ஊர் ஊராய் சென்று ஆடு கிடை போடும் ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த தொரட்டி.

கதாநாயகன் ( மாயன் ) ஷமன் மித்ருவின் அப்பா, அம்மா இவர்களுடன் இடம் பெயர்ந்து ஒரு கிராமத்திற்கு வந்து குடிசை போட்டு தங்குகிறார்கள் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வயல்களில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.

அந்த ஊரில் இருக்கும் மூன்று திருடர்களுடன் (செந்தட்டி), (ஈப்புலி), (சோத்துமுட்டி) அவளிடம்
யதேச்சையாகப் பழக ஆரம்பிக்கிறார். கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ருக்கு உள்ளூரில் திருட்டுத் தொழிலை செய்து வரும் (செந்தட்டி), (ஈப்புலி) (சோத்துமுட்டி) மூவருடனும் நட்பு கிடைக்கிறது. மூவருடனும் சேர்ந்து கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ருக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ரு. அவர்களுடன் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். இருந்தாலும் அவர் மீதுள்ள காதலால் கதாநாயகி (செம்பொண்ணு)
சத்யகலா பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மாயனுக்கும் செம்பொண்ணுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டால், மாயன் குடிப்பழக்கத்தை விட்ட விடுவான் என்று மாயனின் பெற்றோர்கள் முடிவெடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர் சிறிய திருட்டு தொழிலை செய்து வந்த (செந்தட்டி), (ஈப்புலி), (சோத்துமுட்டி) மூவரும் பெரிதாக கொள்ளையடிக்க திட்டமிட்டு, போலீஸில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்கள் போலீஸில் சிக்குவதற்கு கதாநாயகி செம்பொண்ணு சத்யகலா ஒருவகையில் காரணமாக இருக்கிறார்.

ஒரு பெரிய திருட்டில் ஈடுபடும் கதாநாயகன் (மாயன்) ஷமன் மித்ருவின் நண்பர்களான அந்த மூன்று திருடர்கள் (செந்தட்டி) (ஈப்புலி) (சோத்துமுட்டி) தப்பி வந்த போது அவர்களைக் காட்டிக் கொடுக்கிறார் கதாநாயகி (செம்பொண்ணு) சத்யகலா. சிறைக்குச் செல்லும் அந்தத் திருடர்கள் தங்களைக் காட்டிக் கொடுத்த கதாநாயகி (செம்பொண்ணு) சத்யகலாவைக் கொல்ல வேண்டும் என்று வருகிறார்கள். வந்த இடத்தில் நண்பன் ஷமன் மித்ருவின் மனைவியாக இருக்கிறார் அவர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் மாரிமுத்து அமைத்த கதை திரைக்கதை வசனம் மற்றும் கதைக்களம், கதாபாத்திரங்கள், படத்திற்கு தேவையான காட்சிகள் படத்தைப் பற்றிப் பேச வைக்க அவருக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. எந்த இடத்திலும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அவர்களது யதார்த்தத்தை மீறி செயற்கையாக நடிக்கவேயில்லை.

கதாநாயகனின் அப்பா அம்மா, கதாநாயகியின் அப்பா அம்மா, ஊர் பெரிய மனிதர், மூன்று திருடர்கள், இன்ஸ்பெக்டர், டீக்கடைக்காரர் ஆகியோர் படத்தின் கதாநாயகன், கதாநாயகி எந்த அளவிற்கு பெயர் வாங்குகிறார்களோ அதே அளவிற்கு அவர்களையும் குறிப்பிட வேண்டும்.

கதாநாயகன் மாயன் ஷமன் மித்ரு அப்படியே கிராமத்து இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும் குடிப்பழகத்திற்கு அடிமையான பின் அவரைப் போல பலர் சாலைகளில் விழுந்து கிடப்பதை நாம் பார்த்த ஞாபகம் நினைவுக்கு வருவது. அதிகம் பேசாமல் நடிப்பாலும், பார்வையாலும், அவரின் நடிப்பு பாராட்டுக்களைப் பெறுகிறார் கதாநாயகன் ஷமன் மித்ரு.

அட, தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்குக் கூட நடிகைகள் இருக்கிறார்களா என ஆச்சரியப்பட வைக்கிறார் கதாநாயகி சத்யகலா. அச்சு அசலாக ஆடு மேய்க்கும் பெண்ணாகவே மிரட்டியிருக்கிறார்
. கிராமத்துப் பெண்களுக்கே உரிய துணிச்சல், நெகிழ்ச்சி வாயாடி தனம் ஆகியவற்றை அவ்வளவு அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படிப்பட்ட வாயாடும் பெண்களை கிராமங்களில் நிறையவே பார்த்திருப்போம். ஏதாவது விருதுக்கு இந்தப் படம் கலந்து கொண்டால், கதாநாயகி சத்யகலாவுக்கு அதில் ஒரு விருது நிச்சயம் என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால் படத்திற்கு பல விருதுகள் கிடைக்கலாம்

வேத் சங்கர் சுகவனம் இசையில் பாடல்களில் கிராமிய வாசம் வீசுகிறது. ஜிதின் கே ரோஷன் பின்னணி இசையும் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது.
கவிஞர் சினேகனின் பாடல் வரிகள் மனதிற்கு இதமாக இருக்கிறது குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் வயலும் வயல் சார்ந்த இடமும் கதையின் மற்றொரு கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறது

சீரியசான கதையாகவே படம் நகர்வது மட்டும்தான் கொஞ்சம் நமக்கெல்லாம் ஒரு குறையாக தெரிகிறது. ஓரிரு நகைச்சுவைக் கதாபாத்திரங்களை சேர்த்திருந்தால் கொஞ்சம் நகைச்சுவையையும் கூட்டியிருந்தால் கமர்ஷியல் ரீதியாகவும் படம் இன்னும் அனைவரது கவனத்தையும் இர்த்திருக்கும்.

குடிக்கச் செல்பவர்களை இந்த தொரட்டி வைத்து இழுத்து தடுக்க வேண்டும். என்றுதான் இந்த படக்குழுவினருக்கு ஆசை

தொரட்டி – தமிழ் சினிமாவிற்கு அந்த மாதிரி கதைகள்தான் தேவை இருக்கு