தொரட்டி’ பட நாயகி மாயமாகவில்லை

‘ஷமன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘தொரட்டி’ என்ற படத்தில் சத்தியகலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை சத்தியகலா மாயமானதாக, பொள்ளாச்சி காவல் நிலையத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி காவல்துறையினர், நடிகையின் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாயமானதாக கூறப்பட்ட சத்திய கலா இல்லத்தில் இருந்துள்ளார். அவர் “நான் மாயமாகவில்லை. எனது வீட்டில் தான் உள்ளேன்” என கூறியுள்ளார். இதனிடையே சம்பளம் தொடர்பாக நடிகைக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது.