தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக ‘பிக் பாஸ்’ பிரபலம் மீது காவல்துறையில் புகார்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளரும், நடிகையுமான மீரா மிதுன், மாடலிங் துறையை சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருடன் நண்பராக பழகி வந்துள்ளார். பின்னர் பண பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு, மீரா மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜோ மைக்கேல் பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.