தோழியை உள்ளாடையுடன் ரோட்டில் நிறுத்தினேன்: கத்ரினா கைப்

இந்தியில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் கத்ரினா கைப். இவர் தமிழ் படங்களில் நடித்ததில்லை. ஆனாலும், சிலர் அவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கோகோ கோலா விளம்பரத்துக்காக அவர், ஊட்டி வந்திருந்தார். அந்த விளம்பரத்தில், நடிகர் விஜய்யுடன் அவர் நடித்திருந்தார். அப்போது கூட, நடிகர் விஜய் எவ்வளவு எளிமையான மனிதராக இருக்கிறார் என புகழ்ந்து விட்டுச் சென்றார். இந்நிலையில், அவர், சமீபத்தில் காட்சி ஊடகம் ஒன்றுக்கு தன்னுடைய தோழி அனைட்டாவுடன் சென்று பேட்டி அளித்தார். அப்போது, தனக்கும் தன்னுடைய தோழி அனைட்டாவுக்கும் இடையே இருக்கும் நட்பை விவரித்தார் கத்ரினா. 
“நான் என்ன செய்தாலும், அதை பொறுமையாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அனைட்டாவுக்கு உண்டு” என்று சொல்லி, “நான் ஒரு முறை தோழி அனைட்டாவுடன் வெளியே சென்றேன். அப்போது, அனைட்டா அணிந்து வந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அதன் மீதே எனக்கு ஈர்ப்பாக இருந்தது. அனைட்டாவிடம் இருந்து எப்படியாவது அதை வாங்கி விட வேண்டும் என மனது துடித்தது. 
உடனே, தோழி அனைட்டாவிடம், ஜீன்ஸ் பேண்ட் எனக்கு உடனே வேண்டும் என கேட்டேன். அப்போது, இருவரும் ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தோம். அனைட்டா, சற்றும் தாமதிக்காமல், தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கழற்றி என்னிடம் கொடுத்து விட்டார். உள்ளாடையுடன் இருந்த அனைட்டாவை பார்க்க பரிதாபமாக இருந்தது. இருந்தாலும், அவரின் செய்கை; பெருந்தன்மை எனக்குப் பிடித்திருந்தது. அவரை பாராட்டினேன். இப்படிப்பட்ட ஒரு தோழி எனக்கு கிடைத்தது, இறைவன் கொடுத்த வரம்” என்றார்.இதை, அனைட்டாவும் சிரிப்புடன் பேட்டியின் போது விவரித்தார்.