Monday, May 25
Shadow

நடிகராக களமிறங்கும் இயக்குனர் கார்த்திக் நரேன்

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதனையடுத்து அரவிந்தசாமி நடித்த ‘நரகாசுரன்’ படத்தை இயக்கினார். தற்போது ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ராஜூ இயக்கும் ‘கண்ணாடி’ படத்தில் இளமையான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகா நாயரும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் இந்த படம் ஜூலை மாதம் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.