நடிகர் அஜித்தை ஹிந்தி சினிமாவில் நடிக்க அழைக்கும் தயாரிப்பாளர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் நடிகர் அஜித்தின் நடிப்பை கண்டு வியந்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு விரைவில் அஜித்தை இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன். என்னிடம் 3 கதைகள் உள்ளது. அவற்றில் ஒன்றில் அவர் நடிப்பார் என நம்புகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.