நடிகர் அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்

நடிகர் அருண் விஜய் தற்போது ‘பாக்ஸர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கம் இந்த படத்தில் நாயகியாக ‘இறுதிச்சுற்று’ பட நடிகை ரித்திகா சிங் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.