நடிகர் அருண் விஜய் காவல்துறையாக நடிக்கும் ‘சினம்’ படத்தின் அப்டேட் *

இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக ‘சினம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பல்லக் லால்வானி, காளி வெங்கட் உள்பட சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே அருண் விஜய் ‘மாஃபியா’, ‘பாக்ஸர்’ மற்றும் ‘அக்னிச்சிறகுகள்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.