நடிகர் கருணாஸ் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் !

நடிகர் கருணாஸ் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் !

சென்னை 02 ஜூன் 2024 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  நடிகருமான கருணாஸ் நாற்பது துப்பாக்கி தோட்டாக்களுடன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கருணாஸ் சென்னை விமான நிலையத்திலிருந்து  திருச்சிக்கு செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, ​​விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் நடிகர் கருணாஸ்  சோதனையில் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி தோட்டாக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

என்னிடம் துப்பாக்கி உரிமம் (லைசென்ஸ்) இருப்பதகாவும், அதற்கான தோட்டக்கள்தான் இவை என நடிகர் கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

விமானத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும் என்றும் நான் அவசரமாக புறப்பட்டதால் பையில் இருந்த தோட்டாக்கள் இருப்பதை கவனிக்கவில்லை எனவும் நடிகர் கருணாஸ் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம்  விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் விமானத்தில் பயணிக்க கருணாஸ்க்கு அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக திருச்சி  புறப்பட வேண்டிய விமானம் புறப்பட்டு சென்றது.

நடிகர் கருணாசிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.