நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவில்லை : நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடி

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை :
ஆர். கே சுரேஷ் அறிவிப்பு!

ஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ‘என்ற
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆர் கே சுரேஷ் பேசியதாவது…

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால்
பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.மறைந்த என்னுடைய அன்பு அண்ணன் ஜே கே
ரித்தீஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக நான் என்னென்ன செய்யவேண்டுமோ
அதையெல்லாம் நிச்சயமாக செய்வேன். நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத்
தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு.அதே சமயத்தில் நடிகர்
உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.

விஷால் மீது நான்ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட
ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார். அவர்
தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் சார் இருந்தார். பிறகு அவர்
அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை.
அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை.
வரலட்சுமிக்கும் இதே நிலை தான். அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது
எங்களுக்குத் தெரியவில்லை.

நடிகர் சங்கத்தில் திருமண மண்டபங்கள் கட்டலாம். வணிகத்திற்கான ஏற்பாடுகளை
செய்யலாம். ஆனால் நாடகக் கலைஞர்களுக்கு சேரவேண்டிய உடனடியான உதவிகள்
எதுவும் சேரவில்லையே…?

நான் எஸ் .வி .சேகர் அணியில் சேரவில்லை. அவர் எந்த அணியில் இருக்கிறார்
என்றும் தெரியவில்லை.

மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் தற்போது இல்லை. அவர்கள் தற்போது
மாதந்தோறும் ஒய்வூதிய தொகையை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று
விதிப்படி மாற்றியமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும்.
அவரை நடிக்க அனுமதியுங்கள்.

‘பில்லா பாண்டி’ பட விசயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து
வேறுபாடும் இல்லை. இந்நிலையில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நன்றாக
இருக்காது. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு
வருத்தமாகயிருந்தது. அப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை. ” என்றார் ஆர்.
கே .சுரேஷ்.