நடிகர் சங்க கட்டிடம் முடிந்து வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாரையால் உடைப்பேன் – ஆனந்தராஜ் ஆவேசம்

நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. வாக்களித்து திரும்பும் திரை பிரபலங்கள் பல கருத்தை சொல்லி செல்கிறார்கள்.

அப்படி வாக்களித்து திரும்பிய ஆனந்தராஜ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனந்தராஜ் நிருபர்களிடம் பேசும் போது “நல்லது செய்யும் அணி கண்டிப்பாக வெற்றிபெறும். யார் வெற்றிபெற்றாலும் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு கல்வெட்டு வைக்கும்போது “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்று மட்டுமே வைக்க வேண்டும். இன்னார் திறந்தார், அவர் திறந்தார், இவர் திறந்தார் என கல்வெட்டில் ஏதாவது எழுதியிருந்தால், ஒரு கடப்பாறையை கொண்டு வந்து நானே அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கி விடுவே. ஏனென்றால் இந்த கட்டிடம் கட்டும் முயற்சியில் அனைத்து நடிகர்களின் பங்கும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.