நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டி – நாசர் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து தேர்தலை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைத்தனர். இதனிடையே இந்த 6 மாத காலம் நிறைவு பெறுவதால், தேர்தல் குறித்து ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓய்வுபெற்ற ⚖நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.