நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நடிகர் சிவகார்த்திகேயன், தேர்தல் அதிகாரிகளுடன் பேசியதை அடுத்து, சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
“நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்களித்துள்ளார். அவரை வாக்களிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.