நடிகர் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
லைகா நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து தயாரித்த ‘2.0’ படத்தின் வெளியீட்டின் போது விநியோகஸ்தர்களிடம் பல கோடி ரூபாயை முன் தொகையாக பெற்றதாகவும், இதனை திருப்பி வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நடிகர் சூர்யா நடித்து வெளிவர உள்ள ‘காப்பான்’ திரைபடத்தை அவுட்ரேட் முறையில் வாங்க வேண்டாம் என விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ‘2.0’ படத்திற்கு பெற்ற முன் தொகையை திருப்பி அளிக்கும் வரையில், இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ‘காப்பான்’ திரைபடத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்