நடிகர் சூர்யாவின் தோல்வி அடைந்த திரைப்படத்தின் போஸ்டரை காப்பியடித்த ‘துக்ளக் தர்பாரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்கநரும் நடிகருமான ஆர் பார்த்திபன் நடித்துள்ளார்.
தயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
முழு நீள அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இந்த திரைப்படத்திற்கு வசனங்களை எழுத 96 திரைப்பட புகழ் இயக்குநர் பிரேம்குமார் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
அதே துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு
96 திரைப்பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த துக்ளக் தர்பார்
திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓரிரு நிமிடங்களுக்கு முன் வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
இதன் போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய வெளிவந்த “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தின் போஸ்டரை போல் உள்ளது.
நடிகர் சூர்யாவின் தோல்வி திரைப்படங்களில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் ஒன்று என்பது தங்களுக்கு அனைவருக்கும் நினைவிருக்கும்.