நடிகர் சூர்யாவின் புதிய கல்வி கொள்கை; நாடாளுமன்றத்தில் ரஜினிகாந்த் -சூர்யா வாய்ஸ் எதிரொலி

இரண்டு வாரங்களுக்கு முன்பு அகரம் பவுண்டேஷன் விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா  பேசினார்.

அதன் பின்னர் சில தினங்களில் முன் நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் கருத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கும் கேட்கும். மாணவர்களுக்கு உதவும் சூர்யாவுக்கு புதிய கல்வி கொள்கை குறித்து பேச தகுதியுள்ளது என்றார்.

இதனால், பாஜக மற்றும் அதிமுக இடையே இந்த கருத்துக்கு அதிருப்தி உருவானது.

இந்நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் சூர்யா மற்றும் ரஜினியின் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்தை பாராளுமன்ற அவையில் பேசியுள்ளார்.

அவர்கள் வெளிப்படையாகவே அமைச்சர்களால் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோ..