நடிகர் சூர்யாவிற்கு நடிக்கவும் தெரியாது ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என கலாய்த்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

தமிழ் திரைப்பட உலகில் உள்ள கதாநாயகர்கள் & கதாநாயகிகளை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

சமீப காலமாக நடிகை த்ரிஷா, நடிகை நயன்தாரா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவரை வம்புக்கு இழுத்தார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & தளபதி விஜய்யை பற்றி தவறாக பேசியுள்ளார்.

இதனிடையில் அஜித்குமாரை மட்டும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தற்போது நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுத்து அவரது ரசிகர்களை வெறுப்பேத்தி இருக்கிறார் நடிகை மீரா மிதுன்.

நடிகர் சூர்யாவுக்கு ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என கலாய்த்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடிகர் கலையரசன் இறந்தபின் நடிகர் சூர்யா அழ வேண்டும்.

ஆனால் நடிகர் சூர்யாவிற்க்கு அழ தெரியவில்லை.

பலமுறை பல டேக் எடுத்தார்கள் ஆனால் நடிகர் சூர்யாவிற்க்கு நடிப்பே வரலை.

நான் ஒரே டேக்கில் ஓகே வாங்கி விடுவேன்.

நடிகர் சூர்யாவுக்கு நடிப்பின் நாயகன் எனவும் இன்னொரு பெயரும் உண்டு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

நடிகை மீரா மிதுன் நடித்த திரைப்படம் என்று தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு மீடியா புரோமோசன் சக்ஸஸ் மீட்டுக்கு என்னை இன்வெட் பண்ணினாங்க.. அதான் நடிகர் சூர்யா டென்ஷனாயிட்டார்.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்பட இசை விழாவுக்கு கூட நான் இருந்தா நடிகை கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க சொன்னாங்க. என்னைய வர விடல..

நடிகர் சிவகுமார் குடும்பம் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாபியாக்கள் எனவும் தெரிவித்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

நடிகை மீரா மிதுன் நடித்த காட்சிகளை தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் இருந்து வெட்டி எடுத்து விட்டார்கள்.

அதான் இவ்வளவு ஆத்திரம் அம்மணிக்கு என்கிறார்கள் பலரும்.