நடிகர் சூர்யாவுக்கு பிரபல அரசியல்வாதி ஆதரவு
புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா சமீபத்தில் கருத்து ஒன்றை கூறி செய்திருந்தார். இந்நிலையில், பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் “தம்பி சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் அப்பாவி மக்களின் கல்விக்கு உதவுகிற நீ, தகரச்சட்டங்களை பொருட்படுத்தாதே. சிகரங்களை நோக்கிய உன் பயணத்தை தகரங்களின் சத்தங்கள் எதுவும் செய்துவிடாது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் புதிய கல்விக் கொள்கையை கேள்வி கேட்கிறத் தகுதி எல்லோரையும் விட உனக்கு அதிகமாகவே இருக்கிறது என்றும். உன்னை கேள்வி கேட்கத்தான் எவனுக்கும் தகுதி இல்லை எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
தம்பி @Suriya_offl அகரம் அறக்கட்டளை மூலம் அப்பாவி மக்களின் கல்விக்கு உதவுகிற நீ .. தகரச்சட்டங்களை பொருட்படுத்தாதே. சிகரங்களை நோக்கிய உன் பயணத்தை தகரங்களின் சத்தங்கள் எதுவும் செய்துவிடாது. #SuriyaFCWarnsBJPnADMK #SuriyaStandsForEducation
— Nanjil Sampath (@NanjilPSampath) July 15, 2019