நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ராஷி கண்ணாவே சொல்லிட்டாங்க.

நடிகர் ஜெயம் ரவியுடன் அடங்க மறு, திரைப்படத்திலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ராஷி கண்ணா.

இவர் தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை முடித்துவிட்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறது.

அந்த திரைப்படத்தில் தான் நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறாராம்.

தனது சமூக வலைதளத்தில் நடிகை ராஷி கண்ணா ரசிகர்களுடன் சாட்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது “உங்களுடைய அடுத்த திரைப்படங்கள்” என்று ரசிகர் கேள்வி எழுப்பினார்.

தமிழில் ‘அரண்மனை 3′ மற்றும் நடிகர் சூர்யா – ஹரி இணையும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு திரைப்படங்கள் கைவசம் உள்ளது.” என நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.