நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிரேக்கிங் நியூஸ்’ அப்டேட் *

விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த ஆன்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இந்தப் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிகர் ஜெய் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியாக பானு நடிக்கும் இந்தப் படத்தில் கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கு 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு உருவாக்கி உள்ளது. திரையில் இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.