நடிகர் தனுஷ் நடித்த ஜகம் (உலகம்) சுகமடைந்த பிறகு திரைப்படம் திரைக்கு வரும் என இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தை அடுத்து நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
நேற்று உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்ட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ஜகம் (உலகம்) சுகமடைந்த பிறகு படம் திரைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.