நடிகர் தனுஷ் போலி சான்றிதழ் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் தனது மகன் என மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் போலியான பிறப்பு, கல்வி சான்றுகளை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.