நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு வந்த கொலை மிரட்டல்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பேசுவதாக ஒரு வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் வாலிபர், எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக ஏதேனும் திரைப்படம் எடுத்தால் தலை இருக்காது. வெட்டிக்கொலை செய்வோம் என்று நடிகர் தனு‌ஷ், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது தென்மாவட்டங்கள் முழுவதும் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.