நடிகர் தளபதி விஜய் வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் இயக்குநர் அமீர்.

நடிகர் தளபதி விஜய் வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் இயக்குநர் அமீர்;

சமீபத்தில் தளபதி நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் சினிமா தரப்பில் இருந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மட்டும் பேசினார்,

அதில், தளபதி நடிகர் விஜய்யை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 166 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தெரிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இயக்குநர் அமீர், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற நடிகர் விஜய் தடையாக இருப்பார் என்பதால்தான் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜ் அரங்கில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர், திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகள் வழகினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் கலூன்ற நினைக்கிறது, ஆனால் அதற்கு தடையாக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம்.

அந்த அழுத்தத்தினால்தான் ஐடி ரெய்ட் நடத்தப்பட்டிருக்கலாம். இது போன்ற சோதனைகளால் நடிகர் விஜய் வளர்ச்சி அடைவார் என தெரிவித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு தமிழனாக தளபதி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.