நடிகர் நாசர் மீது அவரது சகோதரர்கள் மீண்டும் புகார்
நடிகர் நாசரின் சகோதரர்கள் அயூப்பும், ஜவஹரும் சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, சகோதரர் நாசர், தமது தாயை வந்து நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக குற்றம்சாட்டினர். உடல்நலக் குறைவுடன் இருக்கும் தாயார், நாசரை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர். மேலும் நடிகர் நாசர், அவரது தாயை வந்து பார்த்து, கவனித்துக் கொள்ளாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவரது சகோதரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடிகர் நாசரின் சகோதரர்கள் பேசிய காணொளி இணைப்பு👇🏽