நடிகர் பிரேம்ஜி திருமணத்திற்கு தயராகிறாரா

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி. இவர் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு நிற்கும் புகைப்படத்துடன் கேம் ஓவர் என்று எழுதப்பட்ட டி.சர்ட்டை அணிந்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இவர் திருமணத்திற்கு தயாராகிவருவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.