நடிகர் மாதவன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. நடிகர் மாதவன் இயக்கும் இந்த படத்தில் அவரே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு ‘ராக்கெட்ரி-தி நம்பி விளைவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 3 வேடங்களில் மாதவம் இதில் நடிக்கவுள்ள நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது