நடிகர் விஜய்சேதுபதியின் இணையும் நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகர் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். விவசாயிகளின் பிரச்சனை குறித்த கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், அவர் இந்த படத்தில் பாடகி மற்றும் நடன அழகி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ‘லாபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.