நடிகர் விஜய்யின் அனைத்து சொத்துக்களையும் தமிழக அரசு பறிமுதல் செய்ய வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

நடிகர் விஜய்யின் அனைத்து சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

நடிகர் தளபதி விஜய்யின் வீடுகள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் தளபதி விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த ‘பிகில்’ படம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்து உள்ளது.
இதற்கு அவர்கள் வரி செலுத்தாமல் அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர்.

எனவே நடிகர் விஜயின் சொத்துகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

அதேபோல் சினிமா படங்கள் எடுக்கும்போது இந்து சமய விரோத கருத்துகளை திணித்தும், நாட்டுக்கு விரோதமான கருத்துகள் கொண்ட படங்களையும் எடுத்து வருகிறார்கள்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.