நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநங்கைகள் புகார்

 இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் 2 குழந்தைகளை கடத்தி விற்றதாகவும். அந்த குழந்தைகளை துன்புறுத்தி பிச்சை எடுக்க பயன்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி பேசும் ஒரு வசனம் உள்ளது. இதற்கு தற்போது திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி, சமூக வலைத்தளங்களில் திருநங்கைகள் காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.