நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய்சேதுபதிக்கான மாற்றம்⁉

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்காக படக்குழு நிறைய மாற்றங்கள் செய்துள்ளனராம். அதாவது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இந்த படத்தில் அவரது காட்சிகளை முதலில் முடித்து மற்ற பட வேலைகளில் அவர் கவனம் செலுத்த உதவியுள்ளனர். அதோடு இதற்கு முன் அவர் கமிட் செய்த படங்களுக்காக அவரது லுக்கும் மாறாமல் இருக்க மிகவும் கவனமாக தளபதி 64 படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்களாம். மேலும், விஜய்யும் அவரது காட்சிகளை முதலில் முடிக்க ஓகே கூறியுள்ளாராம்.