நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டைக்காரி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தினை தமிழில் ‘சண்டைக்காரி’ என்ற தலைப்பில் இயக்குனர் மாதேஷ் இயக்கி வருகிறார். நாயகனாக விமல் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் விமலின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு ‘சண்டைக்காரி’ படக்குழுவினர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

*