நடிகர் விஷாலிடம் நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன் – இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால்

நடிக்கும் துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறறது.

தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரிக்கிறார்.

கதாநாயகியாக ஆஷ்யா நடிக்க பிரசன்னா, ரகுமான், கவுதமி, நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பிற்க்கு இயக்குனர் மிஷ்கின் முறையாக திட்டமிடாததால், அதிக நஷ்டத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஷெட்யூலுக்கு இன்னும் ரூ.40 கோடி வேண்டும் என்று இயக்குனர் மிஷ்கின் கேட்டதாகக் கூறப்பட்டது.

இதனால் மிஷ்கினை நீக்கி விட்டு விஷாலே படம் இயக்கவுள்ளதாக வந்த தகவலை பார்த்தோம்.

இது குறித்து இயக்குனர் மிஷ்கின் கிண்டலாக கூறியதாவது…

“நான் 40 கோடி கேட்கலை. 400 கோடி கேட்டேன்.

கிளைமாக்ஸுக்கு மட்டும் 100 கோடி கேட்டிருக்கேன்.

ஏன்னா, விஷால் சேட்டிலைட்ல இருந்து குதிக்கிற மாதிரி காட்சி.” என்று தெரிவித்துள்ளார்..