நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன்-2’ திரைப்படத்தின் குறித்த அப்டேட்*

நடிகர் விஷால்-இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் துப்பறிவாளன் 2 என்ற பெயரில் உருவாகவுள்ளது. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த திரைப்படத்தில் விஷாலுடன் புதுமுகம் ஆஷ்யா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.மேலும் நடிகர் பிரசன்னா, நாசர், ரஹ்மான், நடிகை கவுதமி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் லண்டனில் துவங்கப்பட்டிருக்கிறது.