நடிகர் விஷாலுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் பிறப்பிப்பு

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்து, பலமுறை நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும், அவர் தரப்பில் இருந்து எந்தவித சரியான பதிலும் வரவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும், இதுவரை அவர் ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து⚖ உத்தரவிட்டத்தோடு, வழக்கை வரும் 28 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

error: Content is protected !!