நடிகர் விஷால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தனது பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மூலம் வழங்கப்பட்ட பணத்திற்கு நிறுவனம் சார்பில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு பிடித்தம் செய்த தொகைக்கு நிறுவனத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.