நடிகர் வைபவ் – நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு ❗*

இயக்குனர் எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் நடிகர் வைபவ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக தொலைக்காட்சி புகழ் நடிகை வாணி போஜன் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரவு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கு ‘லாக்கப்’ என தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தை நடிகர் நித்தின் சத்யா தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.