நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம் – விசாரணை தள்ளிவைப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இதில் சென்னை விருகம்பாக்கம் 109ம் வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனைதொடரந்து நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியும் வாக்களிக்க சென்ற போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என தெரிந்தும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் மறுவாக்குப்பதிவு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு வருகின்ற 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.