நடிகை காயத்ரி ரகுராம் அரசியலில் இருந்து விலகல்.

நடிகை காயத்ரி ரகுராம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நடிகை காயத்ரி ரகுராம் வாய்ப்புகள் குறைந்த பின்னர், நடன இயக்குனராக உள்ளார். அதனையடுத்து அவர் பா.ஜ.க., கட்சியில் இணைந்து செயல்பட்டார். தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வர வர அரசியல் கீழ்த்தரமாக மாறிவிட்டது. எப்போது பார்த்தாலும் மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பது தான் அரசியல் ஆகிவிட்டது. பக்குவமான தலைவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. உருப்படியா எதுவும் நடக்கவே இல்லை என்றும், “அரசியலில் எனக்கு இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது. அப்படியே அரசியலில் இருந்தால் நம்மை ஜோக்கராகவே மாற்றிவிடுவார்கள். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன். நான் இப்போதைக்கு வெளியில் இருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல வி‌ஷயங்களை கற்றுக்கொள்ள சிறிது இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். தற்போது எந்த அரசியல் கட்சியையும் நான் ஆதரிவிக்கவில்லை. இது நானாக எடுத்த முடிவு” என்று தெரிவித்துள்ளார்