நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி.

நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் 18 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான நடிகை குஷ்பூ உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.