நடிகை சுஜா வருணியை வாழ்த்திய பிரபலங்கள்
கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடல் என பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி. ஆனாலும், அவரால் பிரபலம் அடைய முடியவில்லை. பிக்பாஸ் முதல் சீசன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பின் இவர் பிரபலம் ஆனார்.
இந்நிலையில், அவர் நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவை பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த நவம்பரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து வாழ்த்தினார் நடிகர் ரஜினி.
இப்போது, சுஜா வருணி கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், அவர் தன்னுடைய தோழிகளான இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாசின் மனைவியும், பாடகியுமான சைந்தவி, விஜே அஞ்சனா ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். தோழிகள், சுஜா கர்ப்பமாக இருப்பதற்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்த போது எடுத்தப் படங்கள் அவை.
அந்தப் படங்களை தற்போது, தன்னுடைய வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, தான் கர்ப்பமாக இருக்கும் தகவல்களை கூறியிருக்கிறார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.