நடிகை ஜோதிகா – நடிகர் கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ திரைப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்*

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், நடிகை ஜோதிகா – நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் அக்கா – தம்பி ஆக நடித்துள்ள படம் ‘தம்பி’. திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை ஜோதிகா – நடிகர் கார்த்தியின், அப்பாவாக நடிகர் சத்யராஜும், அம்மாவாக நடிகை கீதாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வருகின்ற 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நாயகியாக நிகிலா விமல் நடிக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.