நடிகை ஜோதிகா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்
நடிகை ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ள படம் ‘ராட்சசி’. இந்த படத்தில், அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஆசிரியர்களால்தான் நாடே கெட்டு போனது என்பது போன்ற வசனங்கள் ‘ராட்சசி’ படத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ராட்சசி’ படத்தை தடை செய்து ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.