நடிகை த்ரிஷாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குநர்.

‘எங்கேயும் எப்போதும்‘படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதனை தொடர்ந்து இவர் சில படங்களை இயக்கினார். இவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் திரைப்படம் இயக்க களமிறங்கியுள்ளார். அதன்படி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமொன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்க்கவுள்ளார். இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியின் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.