நடிப்பும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்; நடிகை சார்மி!

தமிழ் சினிமாவில் ‘காதல் அழிவதில்லை’ சிம்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு படவுலகிற்கு சென்றுவிட்டார். அங்கு பல படங்களில் நடித்த அவர், தற்போது எந்த படத்திலும் தான் நடிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

தனக்கு திருமணம் செய்யும் ஐடியாவும் இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக தொடர்ந்து செயல்படுவேன். என்றும் கூறியுள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.