நட்சத்திர விடுதி மேலாளரை கொலை மிரட்டல் விடுத்ததாக ‘பிக் பாஸ்’ பிரபலம் மீது வழக்கு.*

எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2ம் தேதி, நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பை தங்கள் விடுதியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என மீரா மிதுனிடம் சம்பந்தப்பட்ட விடுதி மேலாளர் தெரிவித்துள்ளார்.

அதற்கு, மேலாளரை மீரா மிதுன் தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுதி மேலாளர் அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல், அதிகாரிகளை அசிங்கமாக திட்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.