நட்புனா என்னானு தெரியுமா வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நட்புனா என்னானு தெரியுமா
லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள “ நட்புனா என்னானுதெரியுமா” என்ற தமிழ்திரைப்படத்தை “ க்ளப் போர்டு ப்ரொடக்ஷன்” நிறுவனத்தின் மூலம் வரும் மே மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இப்படத்தை லிப்ரா ப்ரொடக்ஸன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.
சிவா அரவிந்து இயக்கி உள்ளார் .
யுவராஜ் கேமராமேன் ஆக பணியாற்றி உள்ளார் .
தரண் இசை அமைத்துள்ளார் .
சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
அறிமுக நாயகன் கவின் ஹீரோவாகவும் , ரம்யா நம்பீசன் ஹீரோயின்ஆகவும் ,
அருண்ராஜா காமராஜா மற்றும் ராஜு ஹீரோவுக்கு இணையான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
மேலும் நடிகர்கள் இளவரசு , அழகம்பெருமாள் ,மன்சூர்அலிகான் , மொட்டராஜேந்திரன் , ராமா , பபிதா , மதுரை ஆச்சி சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை
சிறுவயது முதல் ஒன்றாக படித்து பழகி பிசினஸ் செய்துவரும் மூன்று நெருங்கிய நண்பர்களுக்கு இடையே ஒரு பெண்ணைப் பார்த்ததும் உருவாகும் காதல் , அதனால் அவர்கள் நட்பில் , தொழிலில் , வாழ்க்கையில் ஏற்படும் அடுத்தகட்ட நகர்வுகளை சுவாரஸ்யமாக காமெடியான பாணியில் நல்ல இனிமையான மற்றும் இளமையான பாடல் பதிவுகளுடன் நமக்கு கொடுத்திருப்பது சிறப்பு .