நட்பே துணை – திரை விமர்சனம்

 மைதானத்தை வைத்து அரசில்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து ஆதியும், அவரது நண்பர்களும் ஹாக்கி விளையாடி காப்பாற்றுவது தான் நட்பே துணை   படத்தின்  கதை.

கதைப்படி, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்காலில் அமைந்திருக்கும் அரங்கநாதன் விளையாட்டு திடல் மிகவும் பாரம்பரியம் மிக்கது. பிரெஞ்சுக்காரர்களுடன் ஹாக்கி விளையாடி ஜெயித்து, அந்த மைதானத்தை அன்றைய கம்பெனி முதலாளிகளிடம் இருந்து காப்பாற்றி இருப்பார் அரங்கநாதன். இந்த மைதானத்தை தான் இன்று பல ஏழை மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு பயிற்சிக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

பயிற்சி அளிப்பவர் கோச் சண்முகம் (ஹரிஷ் உத்தமன்). மிகவும் நேர்மையானவர். 

அந்த மைதானத்தை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும், என்று கார்ப்பரேட் கம்பெனிகாரர்களுக்கு கொடுக்க சதி திட்டம் செய்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரிசந்திரன் (கரு.பழனியப்பன்).

இதற்கிடையே பிரான்சில் செட்டிலாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் பிரபாகரன் ( ஹிப்ஹாப் தமிழா ஆதி), ஹாக்கி வீராங்கனையான தீபாவை (அனகா) காதலிக்கிறார். அவரை கரெக்ட் செய்வதற்காக, அரங்கநாதன் மைதானத்தில் சுற்றித்திரிகிறார்.

அமைச்சர் ஹரிசந்திரனின் 

(கரு.பழனியப்பன்).

சதியால், அரங்கநாதன் மைதானம் கார்ப்பரேட் கம்பெனியின் கைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்போது, ஒரு ஹாக்கி போட்டியில் ஜெயித்தால் மைதானத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு வருகிறது. இதற்காக ஆதியும், அவரது நண்பர்களும் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் அந்த ஹாக்கி போட்டியில் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பது தான் படத்தின் மிதி கதை

விளையாட்டாகவே இருந்தாலும், இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது படம். அதேபோல், முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படமாக இருந்தாலும், சிகரெட், சரக்கு, ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என எதுவும் இல்லாமல், படத்தை கண்ணியமாக எடுத்ததற்காக இயக்குனர் பார்த்திபனுக்கும், ஆதிக்கும் வாழ்த்துக்கள்

பொதுவாக விளையாட்டை மையப்படுத்திய படங்கள் எல்லாமே ஒரு திம்க்குள் அடங்கிவிடும். நட்பே துணையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கனவே வெற்றி பெற்ற பல விளையாட்டு படங்களை தான் இந்த படம் நினைவூட்டுகிறது. ஆனால் இதில் கையாளப்பட்டுள்ள நட்பு எனும் உணர்வு, இளைஞர்களை சுண்டி இழுக்கும் காந்த சக்தி கொண்டது.

முதல் பாதி படம் நட்பு, காதல், கலாட்டா என ஒரு கமர்சியல் மசாலா படமாகவே நகர்கிறது. இரண்டாம் பாதியில் ஹாக்கி போட்டி ஆரம்பித்த பின்னர் தான் படம் சூடுபிடிக்கிறது. கடைசி அரை மணி நேரக் காட்சிகள், பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் அறிந்திராத, ஹாக்கி பற்றிய விஷயங்களை மிக விரிவாக காட்டியதற்காக படக்குழுவுக்கு பாராட்டுகள்.

படத்தில் ஒரு சாதாரண கல்லூரி மாணவனாக வந்து ரசிகர்களை உற்சாகமூட்டிய ஆதி, இந்த படத்தில் சர்வதேச ஹாக்கி வீரராக வருகிறார். மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். ஆனால் அவரது உருவமும், உடல்மொழியிம் நம்பகதன்மையை ஏற்படுத்த தவறிவிட்டது. ஒரு ஹாக்கி வீரருக்கான பிட்னெஸ், ஆதியிடம் இல்லை.

ஆனால் இசையில் பின்னியெடுத்திருக்கிறார். குறிப்பாக, கடைசி அரை மணி நேரம் வரும் ஹாக்கி போட்டியில், ஆதியின் இசை தான் பார்வையாளரின் ஹார்ட்பீட்டை ஏற்றுகிறது. இளமை துள்ளலுடன் ஒலிக்கும் ‘சிங்கிள் பசங்க’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது.

செம பில்டப்புடன் எண்ட்ரி கொடுக்கும்  வில்லன் கரு.பழனியப்பன், காமெடியில் கலக்கி இருக்கிறார். அவர் சீரியசாக பேசும் ஒவ்வொரு வசனமும், நம்மை சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது. இயல்பான ஒரு அரசியல்வாதியாக ஸ்கோர் செய்கிறார். ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள அனகாவுக்கு படத்தில் வழக்கமான சப்போர்டிங் ரோல் தான். முதல் காட்சியில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் அவர், அதன் பிறகான காட்சிகளில் வழக்கமான ஹீரோயினாகிவிடுகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்திருக்கிறார். கோச்சாக வரும் ஹரிஷ் உத்தமனுக்கு குணச்சித்திர நடிகராக புரோமோஷன் கொடுத்துள்ளது நட்பே துணை. பிட்டான கோச்சாக அப்ளாஸ் அள்ளுகிறார். மற்றபடி, கவுசல்யா, பாண்டியராஜன், விக்னேஷ்காந்த், அஸ்வின் ஜெரோம், ஷா ரா, சுட்டி அரவிந்த் என ஏகபட்ட பேர் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் வந்துபோகிறார்கள். இதில் எருமசாணி விஜய் குமார் மட்டும் தான் கொஞ்சம் காமெடி செய்கிறார். ஒரு சர்வதேச ஹாக்கி போட்டியை பார்த்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் எடிட்டர் பென்னி ஆலிவர், ஒலி வடிவமைப்பாளர் தபாஸ் நாயக் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை படம் போரடிக்காமல் நகர்கிறது. ஆனால் நிறைய காட்சிகள் சினிமாத்தனமாக இருகிறது. வில்லன் கதாபாத்திரம் வலிமையாக இல்லை. க்ளைமாக்ஸ் காட்சிக்கு பிறகு வில்லன் வந்து, இன்றைய அரசியல் பற்றி தத்துவம் பேசி, பாடம் நடத்துவதெல்லாம், எந்த ஊர்ல பாஸ் நடக்கும். கொஞ்சம் ஓவராக போய், செய்தியாளர்களை எல்லாம் கலாய்க்கிறார். 24 மணி நேர செய்தி சேனல்கள் தான் மக்களின் நிம்மதியை கெடுப்பதாக சாடுகிறார். படத்துக்கு சம்மந்தமே இல்லாத இந்த காட்சிக்க எதுக்கு இயக்குனரே. ஹீரோவும் வில்லனும் க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து கொள்கிறார்கள். இதனால் ஆதிக்கு கொடுக்கப்படு ஓவர் பில்டப், புஸ்ஸாகிவிடுகிறது. பிளாஷ் பேக் காட்சியை இன்னும் எமோஷனலாக செய்திருக்கலாம். ஓட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமானால், ‘நட்பே துணை’ ஒரு வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமே தவிர, புதிதாக ஒன்றும் இல்லை.