நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்ட சுதீப்பின் அதிரடியான “பயில்வான்” டிரெய்லர்.
கிச்சா சுதீப் நடிப்பில் “பயில்வான்” திரைப்படத்தின் டிரைலரை தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சில மணி நேரத்திற்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் ஒரு நிமிடம் நாற்பத்தைந்து நிமிடம் உள்ளது. இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார். இந்த டிரைலரில் வரும் வசனங்கள் அனைத்தும் கதாநாயகனனைப் பற்றிய தோற்றத்தை பிரதிபலிக்கின்றன. நாயகனின் பலம், பலவீனம், வீழ்ச்சி மற்றும் தடைகளை உடைத்தெறியும் வெற்றி என்று நாயகனின் வாழ்க்கையை அழகாக சொல்லியிருக்கிறது டிரெய்லர்.
இன்னொருபுறம் டிரெயலர் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான திகழ்ந்த சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்திருப்பதையும் அறிவிக்கிறது. டிரைலர் முழுவதும் நிறைந்திருக்கும் சண்டைக் காட்சிகளை இயக்கியிருக்கும் ஸ்டன்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஸ்மன், Dr.ரவி வெர்மா, லார்னல் ச்டோவல்(பாக்சிங்) மற்றும் A. விஜய்(குஸ்தி). இப்படத்தில் வரும் தெறிக்கும்படியான வசனங்கள் அனைத்தும் வாழ்க்கையின் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR motion pictures நிறுவனத்தின் ஸ்வப்ன கிருஷ்ணா இப்படத்தை தயாரித்துள்ளர். இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் செட் வொர்க் மிகவும் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்படத்தில் ஆகண்க்ஷா சிங், சுஷந்த் சிங், கபீர் துஹன் சிங், சரத் லோஹிதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க கருணாகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநர்களாக கணேஷ் ஆச்சார்யா, ராஜு சுந்தரம் மற்றும் ஹர்ஷா பணியாற்றியுள்ளனர். கிருஷ்ணா, மாது மற்றும் கண்ணன் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடியோகிரபியாக பணியாற்றியவர் நிதின் லுகோஸ். யோகி, சேதன் மற்றும் கணேஷ் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
இப்படத்தின் 1 லுக் போஸ்டரை இந்திய சினிமாவின் முக்கியப் புள்ளிகள் வெளியிட்டுள்ளன. இந்தி மொழியில் சுனில் ஷெட்டி, தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மலையாலத்தில் மோகன்லால் மற்றும் தமிழ் மொழியில் விஜய் செய்துபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்